முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருமாள் கோயில் தீர்த்தம் - பல்வேறு நோய்களுக்கான மருந்து


பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி
புனித தீர்த்தம் நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து
1 – ஏலம்,
2 – இலவங்கம்,
3 – வால்மிளகு,
4 – ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம்
இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தை யும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பதனம் செய்து பூஜை அறையில் வைக்க
லாம்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து் ,. வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .
இது நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட, அனுபவத்தில் கை கண்ட அரிய சஞ்சீவி மருந்து ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...