எள் வேர்க்கடலை உருண்டை இளைத்தவனுக்கு எள் உணவாக கொடுக்கும் போது எடை கூடும். மேலும் பல சத்துக்கள் நிறைந்த எள்ளையும் வேர்கடலையும் வைத்து எளிதாக செய்யும் ஒரு உருண்டை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும். மேலும் சனிக்கிழமைகளில் சனிக்கிரகத்தினால் ஏற்படும் பாதிப்பைகளை குறைக்க எள்ளினால் உணவை சனிக்கிழமை சேர்த்து கொள்வது நல்லது. தேவையானவை கறுப்பு எள் 1 கப் பச்சை வேர்க்கடலை 1 கப் வெல்லத்தூள் 2 கப் ஏலக்காய்த்தூள் சிறிதளவு செய்முறை கறுப்பு எள்ளை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவும். எள்ளைக் களைந்து, ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி,வெயிலில் உலரவிடவும்.லேசாக ஈரம் இருக்கும்போது வெறும் வாணலியில் சிறிதுசிறிதாக போட்டு வெடிக்கும்படி வறுக்கவும். ஆறிய பின் எள், வேர்க்கடலை, வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக்கவும்.