முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஞ்சள் ஒரு மாமருந்து

மஞ்சள் ஒரு  மாமருந்து 


      மஞ்சள் ஒரு அற்புதானமான மருந்து பொருள் என்பது அறியாமலேயே நாம் தினமும் மஞ்சளை சமையலில் உபயோகித்து வருகிறோம். அதன் பயன்களை இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்தால் உணவே மருந்து எனும் உண்மையை `விளங்கி கொள்ள முடியும்.

    எனக்கு தெரிந்த ஒரு சிலர் ஒரு வேளைக்கு 20 அல்லது 30 மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. முப்பது மாத்திரைகளை ஒருவர் சாப்பிடும் போது உணவு அருந்த அங்கே வயிற்றில் இடமேது.மேலும் மருந்தால் வரும் பக்க விளைவுகளையும் நாம்  சந்திக்க வேண்டி இருக்கிறது .

      ஆனால் வீட்டுற்குள்ளேயே ஒரு எளிய உணவு பொருளான மஞ்சள் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற மருத்துக்களை உட்க்கொண்டு உடல் வீணாவதை தவிர்க்க முடிகிறது .

    மஞ்சளில் குர்குமின் எனும் ஒரு வேதி பொருள் உள்ளது அது பல்வேறு நோய்களை குணமாக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கபட்டு  இருக்கிறது.

           மேலும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த கூடியது.என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். அதனாலேயே அசைவ சமையலில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு .

 மேலும் தினமும் சிறிதளவு மஞ்சளை தண்ணீருடன் கலந்து எடுத்து கொள்வது கேன்சர் போன்ற கொடிய நோய்களை வர விடாமல் தடுக்கிறது
வந்தவர்களுக்கும் அதன் வீரியத்தை குறைக்க உதவுகிறது .

 மஞ்சளில் உள்ள குர்குமினை நமது ரத்த ஓட்டத்தில் கலப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் மிளகுடன் சேர்ந்து எடுத்து கொள்ளும் போது மிளகானது நமது ரத்த ஓட்டம் ஏற்றுக்கொள்ளும் சதவிகிதத்தை பல மடங்கு அதிகரித்து கொடுக்கிறது .  

மஞ்சளானது நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஒன்று மேலும் நோய் கிருமிகளை எதீர்த்து போராடி அழிக்க வல்லது அதனாலேயே கேன்சர் போன்ற வியாதிகளில் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது .

எண்டோதெலில் செல்கள் (Endothelial ) இதயம் சீராக இயங்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருந்து உருவாகும் ஒரு பொருளானது ரத்த நாளாம்  சுருங்கி விரிவதை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ரத்தஓட்டம் கட்டுக்குள் வருகிறது. இந்த எண்டோதெலில் நன்றாக வேலை செய்ய மஞ்சளில் உள்ள குர்குமின் உதவுகிறது . மஞ்சளை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வருவோருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது .

அல்சைமர் எனும்  மன நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் ஒரு மாற்றாக  உதவுகிறது மஞ்சள். மூளையில் கெடுதி தரும் ஒரு பதிவாக கருதப்படும்  ஒரு வகையான புரோதம்  (Amyloid plaques). மஞ்சளில் உள்ள  குர்குமின் அந்த புரோதத்துடன் வினை புரிந்து  (Amyloid plaques) நீக்க உதவுகிறது. மேலும் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது .

மூட்டு வலியை குறைப்பதற்கும் மஞ்சள் பயன்படுகிறது.

மேலும் இளமையாக இருக்க உதவுகிறது இந்த மஞ்சள்.  மஞ்சளை முகத்துக்கு பூசி குளிக்கும் போது முக சுருக்கம் வருவது தடுக்க படுகிறது மேலும் வயோதிக தோற்றம் வராமல் முகம் இளமையாக இருக்கிறது.இன்றைய பெரும்பாலான முக பூச்சு கிரீம்களில் இதனாலேயே மஞ்சள் முக்கிய பொருளாக சேர்க்க படுகிறது .

  மேலும் காய்கறிகளை  வாங்கியவுடன்  மஞ்சள்உப்பு மற்றும் கலந்த நீரில் கழுவி பயன்படுத்துவதால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

கல்லிரலை பலப்படுத்துகிறது 

வயிறு சம்பந்தமான உபாதைகளை குறைகிறது 

காயங்களை விரைந்து குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது .

 உணவில் மஞ்சளை இனிமேல் அடிக்கடி பயன்படுத்துவோம் மஞ்சளின் பயனை அறிந்தோம் உணவே மருந்தாகும் என்பதில் மஞ்சளின் முக்கியத்துவம் உணர்ந்தோம். 

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் இமெயிலில் பெற subscribe  செய்யுங்கள். நல்ல தகவல்களை மற்றவருக்கும் பகிருங்கள் .






 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...