முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூண்டை உபயோகப்படுத்தும் முறை

பூண்டை உபயோகப்படுத்தும் முறை

1.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2.   நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.

3.   பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.

4.   பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5.   பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

6.   தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

7.   பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

8.   பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

9.   காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

10.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

11.  பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.

இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

Pls subscribe...Enter your comments

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...