முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள் உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆனால், இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. சத்துக்கள் நீர்ச்சத்து – 0.66 % புரதம் – 6.1 % கொழுப்பு – 0.1 % மாவுச்சத்து – 0.16 % நார்ப்பொருள் – 6.4 % தாது உப்புக்கள் 4.2 % 100 கிராம் இலையில் கால்சியம் – 810 மிலி கிராம் பாஸ்பரஸ் – 600 மிலி கிராம் இரும்புச்சத்து – 3.1 மிலி கிராம் நிகோடினிக் அமிலம் – 2.3 மிலி கிராம், மேலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன. மருத்துவ பயன்கள் கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும். கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.

கருவேப்பிலையின் மருத்துவ பயன்கள்

உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
ஆனால், இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

சத்துக்கள்
நீர்ச்சத்து – 0.66 %
புரதம் – 6.1 %
கொழுப்பு – 0.1 %
மாவுச்சத்து – 0.16 %
நார்ப்பொருள் – 6.4 %
தாது உப்புக்கள் 4.2 %
100 கிராம் இலையில்
கால்சியம் – 810 மிலி கிராம்
பாஸ்பரஸ் – 600 மிலி கிராம்
இரும்புச்சத்து – 3.1 மிலி கிராம்
நிகோடினிக் அமிலம் – 2.3 மிலி கிராம், மேலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

மருத்துவ பயன்கள்
கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.

Please enter your mail id for subscribe future posts.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...