பொட்டுக்கடலை லட்டு செய்வது எப்படி....
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பொட்டுக்கடலை200 கிராம்
சர்க்கரை 100 கிராம்
முந்திரிப் பருப்பு10
நெய்தேவைக்கேற்ப
மிதமான வெந்நீர் தேவைக்கேற்ப
செய்முறை :
பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக