முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடக்கத்தான் கீரை தோசை - ஆரோக்கிய சமையல்

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி ....

செய்ய தேவையான பொருட்கள்

தோசை மாவு – இரண்டு கப்
முடக்கத்தான் கீரை – இரண்டு கப்
சின்ன வெங்காயம் – 10 முதல் 15
வெள்ளை பூண்டு – 10 முதல் 15
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் உறித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அந்த நேரத்தில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு வதங்கி வாசனை வரும் நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரை நன்கு எண்ணெயில் வதங்க வேண்டும். பச்சை வாசனை செல்லும் வரை கீரையை வதக்கிக் கொண்டால் தோசை சுவையாக இருக்கும். கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விடலாம். இப்போது வதக்கி வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்யாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

 

அந்த கலவையை நாம் தோசை மாவில் கலந்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இப்பொழுது முடக்கத்தான் கீரை தோசை மாவு தயார். இந்த மாவு வைத்து இட்லி அல்லது தோசை செய்து கொள்ளலாம். தோசை செய்யும் பொழுது நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் தோசை சற்று வாசனையாக இருக்கும் . முடக்கத்தான் கீரையை தோசையாக செய்து சாப்பிடும் பொழுது அதன் கசப்புத்தன்மை தெரியாது சாப்பிடுவதற்கு சுவையாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கும்.....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...