முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபி மற்றும் டீ குடிப்பது நல்ல பழக்கமா ?

அவருக்கு பீடி, சிகரெட், பாக்கு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்ல அவருக்கு போய் இந்த வியாதி எப்படி வந்ததுன்னு தெரியல இப்படி யாராவது சொல்லி நம்ம பார்த்துருப்போம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமா  இருக்க என்ன என்ன நல்ல பழக்கம் இருக்குனு நாம பார்க்கிறதில்ல

1. சிலர் ரொம்ப நல்ல பழக்கம் வச்சிருப்பாங்க ஆனால் யாருக்காவது உதவி செய்யணும்னு முடிவெடுத்துட்டா சாப்பாடு , தூக்கம் மறந்து ஓடி ஓடி உழைப்பாங்க ...
2.இன்னும் சிலர் ஒரு காபி இல்லது டீ குடிச்சிட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க...
3.ஒரு சிலர் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா காலைல எந்திரிச்சதும் வெறும் வயிற்றில் காபி குடிச்சாதான் எனக்கு நாளே போகும்னு சொல்லுவாங்க

இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்க கூட இந்த காபிக்கு அடிமையாகி தேவை இல்லாத நேரத்தில் பருகி ஜீரண உறுப்பை கெடுப்பதுடன் நாளடைவில் சரியான நேரத்தில் பசி எடுக்காமல் சரியான முறையில் உண்ணாமல் உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை கிடைக்கவிடாமல் செய்வதுடன் கெடுத்துக்கொள்கிறார்கள்.

உடலில் ஏற்படும் அமிலத்தன்மை கேன்சர் போன்ற கிருமிகள் விரைவாக பரவ வழி செய்கின்றன. உடலின் பித்தம் கூடி சமநிலை கெட்டு மேலும் பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.

காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி தவிர்த்து  இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து 45 நிமிடம் கழித்து எதையும் பருகி பாருங்கள்.

எந்த கெட்ட பழக்கம் இல்லை என்று சொல்லுமுன் சில நல்ல பழக்கங்களை வளர்த்து கொண்டால் நீண்ட நாள் இருக்கலாம்.

1. சுத்தம் பேணுதல்
2.நேரத்திற்கு உணவு அருந்துதல்
3.உடலுக்கு தேவையானவற்றை உண்ண கொடுத்தல்
4.எளிய உடற்பயிற்சி
5.காபி மற்றும் டீ அளவை குறைத்தல் மற்றும் அவசியத்தை குறைத்தல்
6.போதுமான ஒய்வு

பழக்கத்தை மாற்றுவோம் பல காலம் வாழ்ந்திருப்போம் ...வாழ்க வளமுடன்



   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...