முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

கீரைகள் என்பது நம் தமிழர் உணவுகளில் மருந்தாக பயன்பட்டு வருகிறது. விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள் தான். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையை தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சியுறவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகள் பெருமளவில் உதவுகிறது. ஆனால், இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இங்கு நம் உணவில் என்னென்ன கீரைகள் எடுத்துக்கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்;.

பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.

அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

கல்யாண முருங்கை கீரை - சளி, இருமலை குணப்படுத்தும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சருமநோய், சளித்தொல்லை நீக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும், மூலநோயைக் குணப்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...