முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன் நெல்லிக்காய்

தேன் நெல்லிக்காய் !!


🍊 இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால் நெல்லிக்கனியை தான் சொல்வோம். உள்ளங்கை நெல்லிக்கனி என்னும் சொல்தொடர் மிகவும் பிரபலமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.

சளி மற்றும் தொண்டைப்புண் :
🍈 சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்கள் ஏற்படும். அத்தகையவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி உள்ள சளி அனைத்தும் வெளியேறிவிடும், தொண்டைப்புண்ணும் குணமாகிவிடும்.

இரத்தச் சோகை :
🍈 இரத்தச் சோகை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்தச் சோகை குணமாகும்.

முடி வளரும் :
🍈 நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

இதயம் வலிமையடையும் :
🍈 தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.

பொலிவான சருமம் :
🍈 பொலிவான சருமம் பெற நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண் பார்வை மேம்படும் :
🍈 கண் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

செரிமானம் :
🍈 செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாகும்.

பசி தூண்டப்படும் :
🍈 பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வந்தால் பசியை தூண்டும்.

சிறுநீரக பிரச்சனைகள் :
🍈 சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக  குணப்படுத்த முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...