வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கேரட் - 1
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
* முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
* வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.
* சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.
48 வகையான தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...
கருத்துகள்
கருத்துரையிடுக