முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொட்டு கடலை லட்டு

பொட்டுக்கடலை லட்டு செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் : பொருள் - அளவு பொட்டுக்கடலை200 கிராம் சர்க்கரை 100 கிராம் முந்திரிப் பருப்பு10 நெய்தேவைக்கேற்ப மிதமான வெந்நீர் தேவைக்கேற்ப செய்முறை :   பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.   இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.   பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.   எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.    சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.  

முடக்கத்தான் கீரை தோசை - ஆரோக்கிய சமையல்

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி .... செய்ய தேவையான பொருட்கள் தோசை மாவு – இரண்டு கப் முடக்கத்தான் கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – 10 முதல் 15 வெள்ளை பூண்டு – 10 முதல் 15 சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். அதில் உறித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அந்த நேரத்தில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். சீரகம் நன்கு வதங்கி வாசனை வரும் நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கீரை நன்கு எண்ணெயில் வதங்க வேண்டும். பச்சை வாசனை செல்லும் வரை கீரையை வதக்கிக் கொண்டால் தோசை சுவையாக இருக்கும். கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விடலாம். இப்போது வதக்கி வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்யாக அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.   அந்த கலவையை நாம் தோசை மாவில் கலந்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இப்பொழுத...