முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நார்ச்சத்து தாவர உணவிலிருந்தே கிடைக்கிறது. இது குடல் இயக்கங்களை சுலபமாக்குவதோடு ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.

நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் செய்கிறது.
உணவு உண்ட நிறைவுத் தன்மை கொடுத்து உடல் எடையை குறைய உதவுகிறது.
இதய நோய்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்கின்றது

இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கரையும் மற்றும் கரையா நார்ச்சத்து ஆகும். சைவ உணவில் இரண்டு வகை நார்ச்சத்துக்களும் உள்ளன.


மாமிச உணவுகளான ஆட்டு இறைச்சி மீன் முட்டை மற்றும் பால் பொருட்களில் நார்ச்சத்து கிடையாது.


கரையும் நார்ச்சத்து நீரில் கரைந்து களிம்பு போன்ற அமைப்பை உருவாக்கி செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. வயிறு காலியாவது தாமதமாவதால் வயிறு நிறைந்தது போன்ற உணர்வித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது.
மலத்தை மிருதுவாக்கி மலம் எளிதில் வெளியேற உதவுவதால் நல்ல பாக்டீரியாக்கள் பெருகி, ஆரோக்கியமான பெருங்குடல் அமைய உதவுகிறது.
வயிறு காலியாவது தாமதப் படுவதால் இன்சுலின் உணர்திறனில் சாதகமான விளைவை ஏற்படுத்தி ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் சர்க்கரை நோயை தவிர்க்கவும் செய்கிறது.

கரையும் சத்து காணப்படும் உணவுகள்

https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09


ஓட்ஸ் மற்றும் அதன் தவிடு, பார்லி, கம்பு, பயிர்களான காய்ந்த பட்டாணி, பீன்ஸ், சோயாபீன்ஸ், கொண்டை கடலை, கருப்பு கண் பட்டாணி, புளிப்பான பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி போன்றவையில் உள்ளன, ஆப்பிள், கனிந்த வாழைப்பழம், பேரிக்காய், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, பட்டர் ஃப்ரூட், வெள்ளரி, செலரி, ப்ரோக்கோலி, கிழங்கு வகையான கேரட், உருளை, சர்க்கரைவள்ளி மற்றும் பாதாம் மற்றும் ஆலிவ் விதை போன்றவையில் உள்ளன.

கரையா நார்ச்சத்து


கரையா நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளான குடல் அழற்சி நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றை தடுத்து ஆரோக்கியமான குடல் அமைய உதவுகிறது.


காணப்படும் உணவுகள்
முழு தானியங்களான கோதுமை, கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசி, சோளத் தவிடு, ஓட்ஸ் சிறு தானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி, ராகி, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை மேலும் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள், திராட்சை, வாழைப்பழம், பழங்கள், கிழங்கு வகைகளில் தோல் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆன பாதாம், பிஸ்தா, வாதுமை, அக்ரூட் கொட்டை, பேகான் கொட்டை, பைன் பருப்பு, ஹேசல் பருப்பு, உலர்ந்த அத்திப்பழம் பேரீச்சை நன்றாக உள்ளன.
நார்ச்சத்து உணவில் அதிகரிக்க பழச்சாறுகளை தவிர்த்து முழு பழங்களை உண்ணவும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுடன் உண்ணவும் மைதா உணவுகளைத் தவிர்த்து முழுதானியங்களை சேர்க்கவும்.

தவிர்க்க வேண்டியவை பட்டை தீட்டிய தானியங்களான வெள்ளை அரிசி, மைதா, வெள்ளை ரவை, நூடுல்ஸ், பிஸ்கட், பிரட், பப்ஸ், வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற எண்ணெயில் பொரித்த வகைகள், இனிப்புகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

மருத்துவ பழமொழிகள்

மருத்துவ பழமொழிகள்: 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. அசைவம்சைவம் 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி. 🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு. அசைவம்சைவம் 🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை. 🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை. 🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே. 🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம். விஞ்சு வாதத்தின் விளைவு போம். அசைவம்சைவம் 🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை. 🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும். 🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,...