பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்
🥒அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
🥒மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
🥒நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.
🥒பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.
பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
🥒சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக