காய்கறி பச்சடி
தேவையான பொருட்கள்
1. சமைக்காமல் சாப்பிடுவதற்கு ஏற்ற காய்கறிகள், காரட், சௌசௌ, பீட்ரூட், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், வாழைத்தண்டு; வெண்பூசணி, வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், குடை மிளகாய்' நூக்கோல், புடலை கோவை, மாங்காய், இஞ்சி முதலியன.
2. மிளகுத்தூள், 3. சீரகத்தூள், 4. கொத்தமல்லி, 5. கருவேப்பிலை, 6. எலுமிச்சம்பழம்.
செய்முறை :
மேலே குறிப்பிட்ட காய்கறிகளில் கிடைப்பவற்றை எடுத்துக் கழுவி மேல் தோலை நீக்கித் துருவ வேண்டும். துருவிய பச்சைக்காயுடன் , சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள் தூவிக் கொள்ளவும். இத்துடன் பாதிக்குப்பாதி தேங்காய்த்துருவலை சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி, கருவேப்பிலைஇலைகளைக்கழுவி, நறுக்கி இத்துடன் கலந்து கொள்ளலாம். சுவையைக்கூட்ட சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக