ஆடிக்கூழ் ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். நாளை ஆடிப்பிறப்பு. #ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். ப...