அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் ...