முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நலம் தரும் எண்ணெய்க் குளியல்

 நலம் தரும் எண்ணெய்க் குளியல் இன்றைய இயந்திர யுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய்க் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். அரக்கப் பறக்கக் குளித்து விட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம்,  வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல் போகும் நிலையில் இருக்கிறது.  அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும்  எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது. நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது.  முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.  இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். பொ...

உளுந்தம் பருப்பின் நன்மைகள்

உளுந்தம் பருப்பு ஆசியாவின் தெற்கு பகுதியில் பயன்படுத்தப்படும் பிரபலமான பயறு வகைகளில் ஒன்றாகும். உளுந்தம் பருப்பு உட்கொள்வது புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி, இரும்பு, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. இந்த பயறு கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உளுந்தம் பருப்பில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டுமே உள்ளன, இது நமது செரிமானத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. உளுந்தம் பருப்பில் சேர்க்கப்பட்டுள்ள நார்ச்சத்து பெரிஸ்டால்டிக் இயக்கத்தைத் தூண்டுகிறது. நீங்கள் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த சிக்கல்களிலிருந்து விடுபட உளுந்தம் பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர, பெருங்குடல் கோளாறுகளை குணப்படுத்தவும் உளுந்தம் பருப்பு உதவுகிறது. உளுந்தம் பருப்பில் அதிக இரும்புச் சத்து உள்ளது, இதன் காரணமாக உங்கள் உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உங்களை மேலும் சுறுசுறுப்பாக்க உதவுகிறது. உங்கள் உடலின் அனைத்து உறுப்புக...